புதன், 27 பிப்ரவரி, 2013

புதன், 14 அக்டோபர், 2009

யூனியன் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் கிளார்க் வேலை வாய்ப்பு


யூனியன் பாங்க் ஆப் இந்தியா, தேசிய மாயமாக்கப்பட்ட வங்கி மும்பாயை தலைமையிடமாக கொண்டு இந்தியா முழுவதும் பல கிளைகளுடன் செயல்படுகின்றது. இவ்வங்கிக்கு 1040 புதிய கிளார்க்களை தேர்வு செய்ய உள்ளது.

தமிழகத்தில் மட்டும் மொத்தம் 72 காலியிடங்களில் இடஒதுக்கீட்டின்படி பழங்குடினருக்கு 2 இடங்களும், 14 இடங்கள் ஆதி திராவிடர்களுக்கும், பிற பிற்பட்டோருக்கு (Other Backward Classes) 19 இடங்களும், நிறைவு போட்டியில் 37 இடங்களும் உள்ளன.

வயதுவரம்பு : 30-09-2009 அன்று 18 வயதிற்கு குறையமாலும் 28 வயதிற்கு மிகமாலும் இருக்கவேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுகின்றது. எனவே, இவர்கள் 33 வயது வரை விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பிற பிற்படுத்தப்பட்டோர் 31 வயது வரை விண்ணப்பிக்கலாம். இவர்களுக்கு மூன்று வருடங்கள் வயது தளர்வு அளிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி : மேனிலைப் பள்ளியில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும்.
அல்லது
பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கிகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட ஒரு இளநிலைபட்டம்.

கூடுதல் தகுதியாக கணனியை இயக்குதல், தகவல்களை பெறுதல் மற்றும் சேமித்தல் போன்றவைகள் தெரிந்தவருக்கு நேர்முகதேர்வில் முன்னூரிமை வழங்கப்படுகின்றது.

எழுத்துத் தேர்வு : எழுத்துத் தேர்வு இரண்டு பகுதியாக இருக்கும். முதல் பகுதி எழுத்துத் தேர்வில், புத்தி கூர்மைத்திறன் தேர்வு (Test of reasoning) 75 மதிப்பெண்கள் 50 கேள்விகளும், அடிப்படை கணிதத்திறன் தேர்வு (Test of numerical ability) 50 கேள்விகளுக்கு 75 மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றது, பொது அறிவுத் தேர்வு (Test of general awareness) 50 கேள்விகளுக்கு 50 மதிப்பெண்கள். ஆங்கில அறிவுத் தேர்வு ( Test of English Language) 50 மதிப்பெண்கள் 50 கேள்விகள் கேட்கப்படும். 95 நிமிடங்கள் தேர்வு எழுத நேரம் ஒதுக்கப்படுகின்றது.

ஆங்கில் அறிவுத் தேர்வில் தேர்ச்சிபெற்றால் போதுமானது. மற்ற மூன்று தேர்வுகளின் மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பத்தார்களை அழைக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு இரண்டாம் பகுதியில் கணனியிலிருந்து கேள்விகள் (Test of computer knowledge) இருக்கும். இப்பகுதியில் கேட்கப்படும் கேள்விகள் கணனியின் அடிப்படையைப் பற்றியதாக இருக்கும். இப்பகுதியில் பெறும் மதிப்பெண்ணை தகுதி வரிசைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இத்தேர்வுக்கான நேரம் 30 நிமிடங்கள்.

இரண்டு பகுதியிலும் கேட்டப்படும் கேள்விகள் (Objective type questions) கொள்குறி வகையில் அமைந்திருக்கும். ஒரு கேள்வியை தொடர்ந்து நான்கு பதில்கள் இருக்கும். சரியான பதிலை விண்ணப்பத்தார் பதில் தாளில் குறிக்க வேண்டும். தவறான ஒவ்வொரு பதில்களுக்கும் 0.25 மதிப்பெண், பெறப்பட்ட மொத்த மதிப்பெண்ணில் கழிக்கப்படும்.

அதிகபட்ச மதிப்பெண்கள் பெறப்படுகின்ற விண்ணப்பத்தார்களை இறங்கு வரிசைபடுத்தி, நிறைவுப்போட்டியாளரை 1 பதவிக்கு 3 பேர்களும், இடஒதுக்கீட்டின் கீழ் வருக்கின்ற விண்ணப்பத்தாரை 1 பதவிக்கு 5 பேர்கள் என்ற விகிதத்தில் நேர்முகத்தேர்வு அழைக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வில் கலந்து கொள்பவரிடம், அவர்களுடைய தொடர்கல்வி தேர்ச்சியின் சாதனை, மொழி புலமை, பொது அறிவு திறன், நிகழ்வை எடுத்துரைக்கும் பண்பு, ஆளுமை, பொழுதுபோக்கில் இருக்கும் ஆர்வம், கல்வியைத் தவிர மற்றவற்றில் விண்ணப்பதாருக்கு இருக்கும் ஆர்வம் போன்றவைகளை நேர்முகதேர்வில் தேர்வாளர்கள் கேள்விகளாக கேட்டுகின்றனர். நேர்முகத் தேர்வுக்கு 50 மதிப்பெண்கள் ஒதுக்கப்படுகின்றது.

கிளார்க் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவர்கள் 01-10-2009 முதல் 31-10-2009க்குள் www.unionbankofindia.com என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். பிற பிற்பட்டோர் மற்றும் நிறைவு போட்டியாளர்கள் ரூ.300/- தேர்வுக் கட்டணமாகச் செலுத்தவேண்டும். மற்ற பிரிவினருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

பயிற்சிக்கு தேவையான புத்தகங்கள் உங்கள் ஊரில் உள்ள புத்தகக்கடையில் வாங்கி, நன்கு பயிற்சி செய்தால் வெற்றி உறுதி.
இதுபோல, மாத இதழ்களிலும் வங்கியில் கிளார்க் பதவிக்கான தேர்வில் கேட்கப்படுகின்ற மாதிரி கேள்விகளும், விளக்கமான பதில்களும் வருகின்றது. குறிப்பாக Competition Success Review, GK Today CSR, Pradtiyogita Kiran, Banking Services Chronicle போன்ற மாத இதழ்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சி தாள்கள் உள்ளன. இவை உங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
வெற்றி பெற வாழ்த்துக்கள்

புதன், 23 செப்டம்பர், 2009

விஜயா பேங்கில் புரொபேஷனல் கிளார்க் பதவிகள்

விஜயா வங்கி, இந்தியா முழுவதும் 1100 கிளைகளை கொண்டு மிக சிறப்பாக நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கியாக செயல்படுகின்றது. இவ்வங்கியில் புரொபேஷனல் கிளாக் 500 காலியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 40 பதவிகள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க உள்ளனர். இதில் பொதுப்பிரிவினருக்கு 17 இடங்களும், பழங்குடியினருக்கு 9 இடங்களும், பிற பிற்பட்டோர் வகுப்பினருக்கு (0ther backward classes) 14 இடங்களும் ஒதுக்கப் பட்டுள்ளது.

கல்வித்தகுதி: மேனிலைப் பள்ளி தேர்வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும்.
அல்லது
அங்கிகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சிப் பெற்றிருக்கவேண்டும்.

வயது வரம்பு: 18 வயது முதல் 28 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும், பிற பிற்பட்டோருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு அளிக்கப்படுகின்றது.

எழுத்துத் தேர்வு: ரீசனிங் எபிலிட்டி (Reasoning Ability test) 50 கேள்விகள்- 80 மதிப்பெண்கள், நியூமிரிக்கல் எபிலிட்டி (Numberical Ability Test) 80 மதிப்பெண்கள் – 50 கேள்விகள், கிளரிக்கல் ஆப்டிட்யூட் (Clerical Aptitute) 50 கேள்விகள் – 50 மதிப்பெண்கள், ஆங்கில மொழித் திறன் 50 கேள்விகள் – 50 மதிப்பெண்கள், இந்த நான்கு பிரிவுகளும் கொள்குறி வகை (Objective Questions) யில் 200 கேள்விகளுக்கு 260 மதிப்பெண்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வின் முதல் பகுதி ஒரு மணி நேரம் 35 நிமிடங்கள் நடைபெறும். இந்த தேர்வில் பெறுகின்ற மதிப்பெண் அடிப்படையில் தான் நேர்முக தேர்வுக்கு அழைக்கப்படுகின்றனர்.

எழுத்துத் தேர்வின் இரண்டாம் பகுதியாக 5 வினாக்களுக்கு விளக்கவுரை விடை அளிக்கவேண்டும். ஒவ்வொரு கேள்விக்கும் 20 மதிப்பெண்கள். இத்தேர்வுக்கு ஒரு மணி நேரம் கால வழக்கப்படுகின்றது. கேள்விகளுக்கு ஆங்கிலம் அல்லது தமிழ் மொழியில் பதில் எழுதலாம். இத்தேர்வில் பொதுப்பிரிவினர்கள் 40 சதவீத மதிப்பெண்களும், பழங்குடி பிரிவினர்கள் 35 சதவீத மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.

எழுத்துத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறுபவர்கள், பொதுப்பிரிவில் 1:3 என்றும், பழங்குடியினர் மற்றும் பிற பிற்பட்டோர்களுகான் ஒதுக்கீட்டினருக்கு ஒரு பதவிக்கு ஐந்து பேர்கள் என்ற விகிதத்தில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் 20-12-2009 அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பங்கள்
www.vijayabank.com என்ற இணைய முகவரியில் (on-line Registration) நேர்முக பதிவின் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு கட்டணம் ரூ.300/-. பழங்குடியினருக்கு ரூ.50/-மட்டும் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01-10-2009

www.vijayabank.com என்ற இணைய முகவரியில் விண்ணப்பதாரர் எல்லா தகவலையும் பெறலாம்.


திங்கள், 14 செப்டம்பர், 2009

வங்கியில் கிளார்க் வேலை


உலகில் வல்லரசாக திகழ்கின்ற அமெரிக்கா மற்றும் முன்னேறிய நாடுகளாக இருக்கின்ற பல ஐரோப்பிய நாடுகளில் வங்கித் துறை மிகபெரும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றது. இதற்கு முக்கிய காரணமாக பொருளாதார மந்தம் வங்கித் துறையிலிருந்துதான் ஆரம்பித்தது என்று பல பொருளாதார வல்லூனர்கள், தங்களுடைய கட்டுரைகளில் எடுத்துரைக்கின்றனர். இதன் எதிரொலியாக அமெரிக்க அரசு பல வங்கிகளுக்கு ஊக்கத்தொகை கொடுத்து பல வங்கிகளை நஷ்டத்திலிருந்தும், திவலாக இருந்த சில வங்கிகளை காத்து பொருளாதாரம் முன்னேறமடையவும், மக்களின் மனத்தில் நம்பிக்கை வளரவும் பெரும் உதவி செய்கின்றது. மாறக இந்தியாவில் வங்கித் துறை பெரும் வளர்ச்சிவிகிதத்தில் இருக்கின்றது. இது அரசின் திறமையான செயல்பாடும் மற்றும் அதிகாரிகளின் தகுந்த கட்டுப்பாட்டின் வெளிபாடே.

அமெரிக்க வங்கிகள் ஆட் குறைப்பில் பெருமளவு ஈடுப்படுகின்ற போது, இந்திய வங்கிகள் புதிய ஆட்களை தேர்வு செய்ய விளம்பரம் செய்கின்றன. இந்த நிதி ஆண்டில் மட்டும் சுமார் 16,000 புதிய வேலை வாய்ப்பு வங்கித் துறையில் ஏற்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக இந்தியாவின் மிகப்பெரிய் வங்கியான ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ 11 ஆயிரம் வங்கி கிளார்க் (Bank clerk grade) பதவிக்கு ஆட்களை எடுக்க விளம்பரம் செய்துள்ளது. தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி பகுதியில் செயல்படுகின்ற ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளைகளுக்கு 900 புதிய ஆட்களை எடுக்க இருக்கின்றது. இதில் தமிழகத்திற்கு 880 காலியிடங்களும், பாண்டிச்சேரி பகுதிக்கு 20 காலியிடங்களும் உள்ளன.

தமிழகத்திற்கான 880 வங்கி கிளாக் வேலை காலியிடங்களில், 466 இடங்கள் பொதுப்பிரிவினருக்கும், பிற பிற்படுத்தப்பட்ட இனத்தினற்கு (Other Backward Class) 238 இடங்களும், 167 காலியிடங்கள் தாழ்த்தப்பட்ட இனத்தவகுக்கும், பழங்குடி இனத்தவருக்கு 9 இடங்களும், 9 இடங்கள் பார்வை இழந்தோருக்கும், காதுகேட்கும் திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு 9 இடங்களும், 88 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: மேனிலைப் பள்ளி தேர்வில் 60 சதவீத மதிப்பெண்கள் பெற்றவர்கள் இந்தத் தேர்வு எழுத தகுதியுடையவர்கள், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் உடல் ஊனமுற்றோர் பிரிவினருக்கு மேனிலை தேர்வில் 55 சதவீத மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அல்லது

பட்டப் படிப்பில் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்கவேண்டும். முன்னாள் ராணுவத்தினர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பினர் 35 சதவீத மதிப்பெண் பெற்று பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதே.

வயது வரம்பு : குறைந்தபட்சம் 18 வயதும், 28 வயதிற்கு மிகமாலும் இருக்க வேண்டும். அதாவது, விண்ணப்பத்தாரர் 30-09-1981 க்கும் 01-10-1991க்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு தளர்வு (Age Relaxation)

- பிற பிற்படுத்தப்பட்ட இனத்தவருக்கு 31 வயது வரையும்
- தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 33 வயது வரையிலும்
- உடல் ஊனமுற்ற தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு 43 வயது வரையிலும்
- பிற பிற்படுத்தப்பட்ட உடல் ஊனமுற்றொருக்கு 41 வயது வரையிலும்
- உடல் ஊனமுற்ற பொதுப்பிரிவினருக்கு 38 வயது வரையிலும்

வங்கி கிளாக் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு:

வங்கி கிளாக் பணிக்கு தகுதித்தேர்வு இரண்டு பிரிவாக உள்ளது.

அ. எழுத்துத் தேர்வு

ஆ. நேர்முகத் தேர்வு

எழுத்துத் தேர்வில் உங்களுடைய பொது அறிவுத் திறன், ஆங்கில அறிவு, கணிதத் திறன், புத்திக்கூர்மை திறன், கணனி அறிவுத் திறன் மற்றும் சந்தையியல் போன்ற தனித்தனிப் பகுதியாக பிரித்து தேர்வு எழுதுவோரின் திறனை பரிசோதனை செய்கினறனர்.

பொது அறிவு (General Awareness), கணிதம் (Quantitative aptitute), பொது ஆங்கிலம் (General English) புத்திக் கூர்மைத் திறன் (Reasoning ability) சந்தையியல் மற்றும் கணனி அறிவு (Marketing aptitute and Computer knowledge) போன்ற பகுதியிலிருந்து கொள்குறி வகை (Objective type) அமைப்பில் கேள்விகள் இருக்கும். ஒரு கேள்விக்கு பிறகு நான்கு பதில் இருக்கும், இதில் சரியானவற்றை உங்களுக்கு கொடுக்கப் படுகின்ற விடைத் தாளில் விடையை குறிக்கவேண்டும். எழுத்துத் தேர்வில் தகுதிப்பெற்றோரை நேர்முகத் தேர்வுக்கு அழைப்பார்கள்.

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா நடத்தும் வங்கி கிளாக் தேர்வு இந்த வருடம் நவம்பர் 8 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பிக்க கடைசித் தேதி 15-09-2009. தேர்வுக் கட்டணம் ரூ.250/- (இருநூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி, வங்கி வரவு சீட்டை பெறவேண்டும்.

www.statebankofindia.com or www.sbi.co.in என்ற இணைய தளங்களின் எல்லா தகவலும் உள்ளன. இத்தேர்வுக்கான விண்ணப்பத்தை இணையத்திலே (on-line registration) பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

தேர்வுக்கு தேவையான பயிற்சி புத்தகங்கள் பல நல்ல வெளியீட்டாளர் வெளியிட்டுள்ளனர். இதனை உங்களுடைய ஊரில் உள்ள புத்தகக் கடையில் வாங்கி, பயிற்சி செய்யலாம். இது போல, தினதந்தி நாளிதழிலில் ஒவ்வொரு திங்கக் கிழமையிலும் மாதிரி வினாக்கள் மாணவர் ஸ்பெஷல் என்ற தனிப் பகுதியில் வெளியிடுக் கின்றனர்.





ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

ஐ.ஏ.எஸ் தேர்வு

பிரதானத் தேர்வு - Main Examination


பிரதானத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் முன்பு குறிப்பிட்ட 23 பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். எனவே, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத இருப்பவர்கள் இரண்டு விருப்பப் பாடங்களைக் (நான்கு தாள்கள்) கவனமாகத் தேர்வு செய்ய வேண்டும். இது மட்டுமல்லாது அனைத்து ஒன்பது தாள்களிலும் கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். ஒன்பது தாள்களின் வினாக்களுக்கும் விரிவான விடை அளிக்கின்ற வகையில் தேர்வு இருக்கும்.

பிரதானத் தேர்வுக்கான விருப்பப் பாடங்கள்

1. வேளாண்மை 2. கால்நடைப்பராமரிப்பு, 3. மானுடவியல் 4. தாவரவியல் 5. வேதியியல் 6. சிவில் என்ஜினியரிங் 7. வணிகம் மற்றும் கணக்கியல் 8. பொருளாதாரம் 9. மின் பொறியியல் 10. புவியியல் 11. மண்ணியல் 12. வரலாறு 13. சட்டம் 14. மேலாண்மை 15. கணிதம் 16. மெக்கானிக்கல் என்ஜினியரிங் 17. மருத்துவ அறிவியல் 18. தத்துவம். 19. இயற்பியல் 20. அரசியல் மற்றும் பன்னாட்டு உறவுகள் 21. மனவியல் 22. பொது நிர்வாகம் 23. சமூகவியல் 24. புள்ளியியல் 25. விலங்கியல்.

மேலே குறிப்பிட்ட விருப்பப் பாடங்களில் இரண்டையும் அல்லது விருப்பப் பாடத்தில் ஒன்றையும் பின்வரும் மொழிப்பாடத்தில் ஒன்றையும் தேர்வு செய்யலாம்.


அரபிக், அஸ்ஸாம், பெங்கால், ஹிந்தி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மன், குஜராத், கன்னடம், காஷ்மீரி, கொங்கனி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, நேப்பாளி, ஒரியா, பாலி, பிரெஷியன், பஞ்சாபி, ரஷ்யா, சமஸ்கிருதம், சிந்தி, தமிழ், தெலுங்கு, உருது.

கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் இரண்டு விருப்பப்பாடங்களைச் சேர்த்துப் பிரதானத் தேர்வில் தேர்வு எழுத முடியாது.

அரசியல், சர்வதேச உறவுகள் மற்றும் பொது நிர்வாகம்.
வணிகம், கணக்கியல் மற்றும் நிர்வாகவியல்
மானுடவியல் மற்றும் சமூகவியல்
கணிதம் மற்றும் புள்ளியியல்
வேளாண்மை மற்றும் கால்நடைப்பிரிவு
நிர்வாகவியல் மற்றும் பொது நிர்வாகம்
கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவ அறிவியல்
பொறியியல் பாடத்தில் பின்வரும் பாடங்களில் ஒன்றை மட்டுமே தெரிவு செய்யவேண்டும். சிவில் என்ஜினியரிங்,மின் பொறியியல்/ மெக்கானிகல் என்ஜினியரிங்.

பிரதானத் தேர்வில் உள்ள தாள்கள்:




தாள் மதிப்பெண்
தாள்-1
இந்திய அரசியலமைப்பில் எட்டாவது ஷரத்தில்

குறிப்பிடப்பட்டுள்ள இந்திய மொழிகளில்

ஒன்றைத் தேர்வு செய்யலாம். (எ.கா. தமிழ்மொழி) 300
தாள்-2 ஆங்கிலம்300
தாள்-3 கட்டுரை (ஆங்கிலம்) 200
தாள்-4 & 5 பொது அறிவு 600
தாள்-6,7,8 & 9 இரண்டு விருப்பப் பாடங்கள்

(ஒவ்வொரு விருப்பப் பாடத்திலும் 2 தாள்கள்) 1200

நீங்கள் தேர்வு செய்யும் இரண்டு விருப்பப் பாடங்களின் பாடத்திட்டம் (syllabus) ’வேலை வாய்ப்புச் செய்தி’ இதழின் சிறப்பு மலரில் அல்லது இணையத்திலிருந்து பெறலாம்.

தமிழ் மொழியில் விருப்பப் பாடத்தைத் தேர்வு எழுதி குடியுரிமைத் தேர்வில் பலரும் வெற்றி பெறுகின்றனர், நீங்களும் தமிழ் மொழியில் விருப்பப் பாடத்தை எழுதி வெற்றி பெறலாம்.

பிரதானத் தேர்வு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் துவங்கி டிசம்பர் மாதம் வரை நடைபெறும்.

இந்திய மொழி தாள் – 1 மற்றும் ஆங்கிலத் தாள் – 2 ல் தகுதி மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது. மற்ற ஏழு தாள்களில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் நேர்முகத் தேர்வுக்கு விண்ணப்பதார்கள் அழைக்கப்படுவார்கள்.

நேர்முகத் தேர்வு - Interview Test

இது விண்ணப்பத்தாரரின் கடைசிச் சோதனை, இதுவரை முதல்நிலைத் தேர்வு மற்றும் பிரதானத் தேர்வு போன்றவற்றில் பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள் இருந்திருக்கும். ஆனால், நேர்முகத் தேர்வில் குடியுரிமைப் பணித் தேர்வாளர்கள் விருப்பப்பாடத்திலும், நீங்கள் பெற்ற பட்டப் படிப்பிலோ, முதுநிலை பட்டப்படிப்பிலோ படித்த பகுதிலிருந்து கேள்விகள் இருக்கலாம்.

கேள்விகள் உங்களுடைய விருப்பப் பாடத்தில் இன்றைய நிலையில் ஏற்பட்ட புதிய மாற்றத்தைப் பற்றி இருக்கலாம். உலக நாடுகளில் ஏற்பட்ட புதிய நிகழ்வுகள்/மாற்றங்கள் பற்றி இருக்கலாம். இது தவிர கடந்த ஒரு வருடத்தில் நடைபெற்ற உலக, இந்திய மற்றும் உங்கள் மாநில நிகழ்ச்சிகள், மாநில அரசின் சமூகநலதிட்டங்கள் பற்றி கேள்விகளும் முக்கியமாகக் கேட்கப்படலாம்.

எனவே, முன்பு எழுத்துத் தேர்வுகளில் இருந்தது போலல்லாமல் உங்களுடைய ஆளுமையை, அறிவை, அறிந்தவற்றை, எந்தப் பிரச்சினைக்கும் தெளிவான முடிவு எடுக்கும் நிலையை மொத்ததில் நீங்கள் குடியுரிமைப் பணிக்குத் தகுதியுடையவரா? என்று ஐந்து முதல் ஏழு பேர்கள் கொண்ட குழு உங்களை நேர்முகத் தேர்வில் உங்களுடைய தன்னம்பிக்கை, பிரச்சினைக்குத் தீர்வு காணும் பாங்கு, உலக மற்றும் இந்திய வரலாறு, புவியியல் மக்களுடைய பழக்க வழக்கங்கள் பற்றி உங்களுடைய அறிவைச் சோதிப்பார்கள். இந்த நேர்முகத் தேர்வு 45 நிமிடங்கள் முதல் 95 நிமிடங்கள் வரை நடைபெறலாம்.

நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பிரதான தேர்வில் பெற்ற மதிப்பெண்களைச் சேர்த்து, இட ஒதுக்கீடு முறையில் இறங்கு வரிசையில் 23 குடியுரிமைப் பணிகளுக்கு மே மாதம் இரண்டாம் வாரம் முக்கிய நாளேடுகள், இந்தியக் குடிமைப் பணித்தேர்வு ஆணையம் இணைய தளத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்களுடன் முடிவுகளைக் காணலாம்.

குடியுரிமைப் பணித்தேர்வு எழுதத் தேவையான தகுதிகள்

கல்வி : ஏதாவது ஒரு பாடத்தில் இளங்கலைப் பட்டம், பி.ஏ., பி.எஸ்ஸி., பி.காம்., பி.எஸ்ஸி வேளாண்மை, பி.இ., பி.டெக்., எம்.பி.பி.எஸ் போன்ற பட்டப் படிப்பில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகளும் விண்ணப்பிக்கலாம். கண்டிப்பாக பிரதானத் தேர்வு எழுதும் போது நீங்கள் இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது : ஆகஸ்ட் மாதம் முதல் தேதியன்று 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். 30 வயதிற்கு மிகாதவராக இருக்கவேண்டும்.

இட ஒதுக்கீட்டாளர்களுக்கான வயது வரம்பு நிறைவுப் போட்டியாளர் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்கவேண்டும். இவர்கள் நான்கு முறை தேர்வு எழுதலாம். பிற பிற்படுத்த வகுப்பினர் 21 வயது முதல் 33 வயது வரை ஏழு முறை தேர்வில் பங்கு பெறலாம். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி விண்ணப்பதார்கள் 21 வயது முதல் 35 வயது வரை தேர்வு எழுதலாம்.

முக்கிய தகவல்கள் :

குடியுரிமைப் பணித்தேர்வு விளம்பரம் வேலைவாய்ப்பு இதழில் (Employment News) ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் குடியுரிமைப் பணி பற்றி முழுவிவரச் சிறப்பு மலர் வெளிவரும்.

இணைய தளம்
http://www.upsc.gov.in ல் குடியுரிமைப் பணித்தேர்வு பற்றி முழுத்தகவல் கொடுக்கப் பட்டுள்ளது, குடியுரிமைப் பணித்தேர்வு விண்ணப்பம், பாடத் திட்டம், பழைய வினா தாள்கள், தேர்வு நடைபெறும் நாள் மற்றும் இடம் போன்ற முக்கிய தகவல்களை அறிந்து கொள்ளலாம்.

தமிழநாட்டில் குடியுரிமைப் பணித்தேர்வு எழுத விரும்பும் விண்ணப்பதாரர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு பலமுயற்சிகளை எடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் பொது நூலகங்களில் குடியுரிமைப் பணித்தேர்வுக்கு தேவையான நூல்கள் தனிப்பகுதியாக செயல்படுகின்றது. இப்பகுதி குடியுரிமைப் பணித்தேர்வு முயல்வார்களுக்கு ஆக்கத்தையும், ஊக்கத்தையும் தரும் வகையில் உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் குடியுரிமைப் பணித்தேர்வுக்கு என்று தனி நூலத்துடன் வாசகர் வட்டமும் செயல்படுகின்றது. இவ் வாசகர் வட்டத்தை பயன்படுத்தி பலர் குடியுரிமைப் பணித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீங்களும் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்படும் வாசகர் வட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

பயிற்சி மையங்கள்

அகில இந்தியக் குடிமைப் பணித்தேர்வு பயிற்சி மையம், இரண்டாவது அவென்யூ, அண்ணா நகர் மேற்கு, சென்னை – 600 040. என்ற முகவரியில் செயல்படுகின்றது. இம்மையத்தை அறிய http://www.civilservicecoaching.com/ இணைத்திற்கு செல்லவும், இம்மையம் நடத்தும் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால், இலவசமாக பயிற்சிப் பெற்றலாம். இப்பயிற்சி மையத்தில் பயின்ற பலரும் குடியுரிமைப் பணியில் இருக்கின்றனர்.


தானியார் மையங்கள்
சென்னை வண்டலூர் பி.எஸ். அப்துர்ரகுமான் பல்கலைக்கழகத்தில் குடியுரிமைப் பணித்தேர்வு (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் அரசுப்பணி) முழுநேர பயிற்சி வகுப்புகள் ஒவ்வொரு வருடமும் ஜீன் மாதம் சேர்க்கை நடைபெறுகின்றது.

மேல் விபரங்களுக்கு, தொலைபேசி எண் 044-22751155, செல் 9840259611

மேலும் சில தானியார் மையங்களின் இணைய முகவரிகள்

http://shankariasacademy.com/

http://plrajmemorial.googlepages.com/

http://www.synergyias.com/

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

ஐ.ஏ.எஸ் தேர்வு




யாருக்குத் தான் ஆசையில்லை ஐ.ஏ.எஸ். ஆக! ஏன் உங்களுக்கும் உங்கள் வளர்த்தவருக்கும் இந்தக் கனவு இருக்காதா? அக்கனவை நனவாக்க ஐ.ஏ.எஸ் தேர்வைப் பற்றிச் சற்றுத் தெளிவாக பார்ப்போம்.

இந்தியக் குடிமைப் பணித்தேர்வு ஆணையம் (Union Public Service Commission) மூலம் இந்திய ஆட்சிப் பணித்துறை (ஐ.ஏஎ.ஸ்) இந்தியக் காவல் பணித்துறை (ஐ.பி.எஸ்) போன்ற இருப்பத்தி மூன்று துறைகள் இருக்கின்றன.

01. Indian Administrative Service.
02. Indian Foreign Service.
03. Indian Police Service.
04. Indian P & T Accounts & Finance Service, Group ‘A’.
05. Indian Audit and Accounts Service, Group ‘A’.
06. Indian Revenue Service (Customs and Central Excise) Group 'A'
07. Indian Defence Accounts Service, Group ‘A’.
08. Indian Revenue Service, Group ‘A’.
09. Indian Ordnance Factories Service, Group 'A' (Assistant Works Manager, Non- technical)
10. Indian Postal Service, Group ‘A’.
11. Indian Civil Accounts Service, Group ‘A’.
12. Indian Railway Traffic Service, Group ‘A’.
13. Indian Railway Accounts Service, Group ‘A’.
14. Indian Railway Personnel Service, Group ‘A’.
15. Post of Assistant Security Officer, Group 'A' in Railway Protection Force.
16. Indian Defence Estates Service, Group ‘A’.
17. Indian Information Service (Junior Grade), Group ‘A’.
18. Indian Corporate Law Service, Group "A"
19. Armed Forces Headquarters Civil Service, Group ‘B’ (Section Officer’s Grade)
20. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Civil Service, Group 'B'.
21. Delhi, Andaman & Nicobar Islands, Lakshadweep, Daman & Diu and Dadra & Nagar Haveli Police Service, Group 'B'.
22. Pondicherry Civil Service, Group 'B‘
23. Pondicherry Police Service, Group 'B‘

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்துப் பணிகளுக்கும் குடியுரிமைப்
பணித்தேர்வின் மூலமே தேர்தெடுக்கப்படுகின்றது.

குடியுரிமைப் பணித்தேர்வு மூன்று நிலையாகும்.

1. முதல் நிலைத் தேர்வு (Preliminary Examination)

2. பிரதானத் தேர்வு (Main Examination)

3. நேர்முகத் தேர்வு ( Interview Test)


முதல் நிலைத் தேர்வு

முதல் நிலைத்தேர்வு கொல்குறி வினாக்கள் அடங்கியது (Multiple Choice Questions). இத்தேர்வு இரண்டு தாள்கள்.

1. பொது அறிவு – 150 வினாக்கள் – 150 மதிப்பெண்கள்
2. விருப்பப் பாடம் – 120 வினாககள் - 300 மதிப்பெண்கள்
.

பொது அறிவுத்தாளில் வரலாறு, புவியியல், இந்திய அரசியல் அமைப்பு, தற்போதைய நாட்டு நடப்பு, அறிவைச் சோதிக்கும் வினாக்கள், அறிவியல் போன்ற பாடங்களில் இருந்து வினாக்கள் கேட்கப்படும்.

முதல்நிலைத் தேர்வுக்கான விருப்பப் பாடங்கள் மொத்தம் 23 இதில் விண்ணப்பதாரர் விரும்பும் ஒரு பாடத்தில் தேர்வு எழுதலாம்
.

விருப்பப் பாடங்கள்

1. வேளாண்மை, 2. கால்நடைப் பராமரிப்பு 3 தாவரவியல் 4.வேதியியல் 5. சிவில் என்ஜினியரிங் 6. வணிகம் 7. பொருளாதாரம் 8. மின் பொறியியல் 9. புவியியல் 10. மண்ணியல் 11. இந்திய வரலாறு 12. சட்டம் 13. கணிதம் 14.மெக்கானிகல் என்ஜினியரிங் 15. மருத்துவ அறிவியல் 16. மனவியல் 17. இயற்பியல் 18. அரசியல் 19. மனவியல் 20. பொதுநிர்வாகம் 21. சமூகவியல் 22. புள்ளியியல் 23. விலங்கியல்.


இரண்டு தாள்களிலும் வினாக்கள் இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் அமையப் பெற்றிருக்கும். விருப்பப்பாடம் பட்டப்படிப்பு பாடத்திட்டப்படி இருக்கும். ஒவ்வொரு தேர்வும் இரண்டு மணிநேரத் தேர்வாக இருக்கும். முக்கியமாக விருப்பப் பாடத்தைத் தேர்வு செய்வதில் தான் விண்ணப்பத்தாரரின் வெற்றி உள்ளது. பிரதான தேர்வு எழுத முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

எனவே, பொது அறிவுத்தாள் மற்றும் விருப்பப் பாடத்தை விண்ணப்பதாரர் நன்கு படித்து எமுதவேண்டும். முதல்நிலைத் தேர்வை இந்தியா முழுவதும் சுமார் 4,20,000 பேர்கள் கடந்த வருடம் எழுதினார். முதல்நிலைத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறங்கு வரிசையில் மதிப்பெண்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு, குடியுரிமைப் பணிகளுக்குத் தேவையானவர்கள் எண்ணிக்கையில் பத்து மடங்கு விண்ணப்பதாரர்களை, பிரதானத் தேர்வு எழுத இந்தியக் குடிமைப்பணித் தேர்வாணையம் அனுமதிக்கின்றது.

புதன், 15 ஜூலை, 2009

கலந்தாய்வை கண்டு கலங்க வேண்டாம்

இந்த ஆண்டிற்கான பொறியியல் பட்டப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்றுக் கொண்டுள்ளது. தொழிற் பிரிவு கலந்தாய்வு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் தொழிற்பிரிவினருக்கு உள்ள 1598 இடங்கள் நிரப்பப்பட்டது.

அடுத்து அகடெமிக் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜீன் 10 முதல் ஜீன் 29 வரை நடைபெற உள்ளது. இதில் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பெண் (cut-off mark) 200 முதல் 161 வரை பெற்ற மாணவர்கள் பங்கு பெற உள்ளனர், சுமார் 60,000 மாணவ/மாணவிகள் கனவுகள் நினைவு பெற உள்ளது.

பல புதிய பொறியியல் கல்லூரிகள் வருவதால் இந்த ஆண்டு அரசு ஓதுக்கீடு 1,50,000 பொறியியல் பட்டப்படிப்பு இடங்கள் இருக்கலாம். தற்பொழுது, தமிழகத்தில் 344 பொறியியல் கல்லூரியிலிருத்து 375 ஆக உயர்ந்துள்ளது. இதில், அரசு ஓதுக்கீடு சுமார் 93,000 இடங்கள் இருக்கும், இன்னும் 25 புதிய பொறியியல் கல்லூரிகள் AICTE மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தில் அனுமதி பெற உள்ளது. எனவே, பொறியியல் கல்லூரியில் மனு செய்துள்ள அனைத்து மாணவ/மாணவிகளுக்கும் அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் கிடைக்க அதிக வாய்ப்புள்ளது.

கலந்தாய்வில் பங்குபெறும் மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை

அண்ணா பல்கலைக் கழக கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் பெற்ற மாணவர் மற்றும் அழைப்புக் கடிதம் பெற தவறியவரும் (கண்டிப்பாக விண்ணப்பம் செய்து இருக்க வேண்டும்) ஒட்டு மொத்த கூட்டு மதிப்பெண்க்கு உரிய நாட்களில் கலந்தாய்வில் அண்ணாபல்கலைக் கழக விளம்பரத்தில் குறிப்பிட்ட தேதி,நேரத்தில் பங்கு பெறலாம். எனவே, அழைப்பு கடிதம் பெறவில்லையே என்ற காரணத்தினால் உங்கள் வாய்ப்பை இழக்க வேண்டாம்.

கலந்தாய்வுக்கு செல்லும் முன்பாக குறிப்பாக மாணவரும்,பெற்றோரும் நன்கு ஆலோசனை செய்து சுமார் 2 அல்லது 3 பொறியியல் பாடப்பிரிவுகளை (BRANCH)தேர்வு செய்யவும், தேர்வு செய்த பொறியியல் பிரிவுகள் உள்ள கல்லூரிகளில் 10 முதல் 15 கல்லூரிகளின் பெயர்களுடன் கல்லூரிக்கான எண்ணையும் எழுதிவைத்துக் கொள்ளவும்.
http://www.annauniv.edu/adm/tnea2008/vacancya.html என்ற இணைய தளத்திற்கு சென்றால் கடந்த வருடம் ஒட்டு மொத்த கூட்டு மதிப்பெண்க்கு எந்த கல்லூரில் எந்த பாடப்பிரிவு கிடைத்தது என்பதை வைத்து இந்த வருடம் அதே கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதா என்று ஒரு அளவுக்கு முடிவுக்கு வரலாம். கனவு மெய்படுமா! - II என்ற பதிவை படித்தால் முடிவு எடுக்க உதவியாக இருக்கும்.


அண்ணா பல்கலைக்கழக் இணையதளம் http://www.annauniv.edu/ ல் மாணவருக்கு தேவையான பல தகவல்கள் உள்ளன. கலந்தாய்வில் பங்கு பெறுகின்ற நாளுக்கு முன்பு http://www.annauniv.edu/tnea2009/vacancyaca.html என்ற இணைய- தளத்திற்கு சென்று நீங்கள் தேர்வு செய்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவு இடங்கள் உள்ளனவா என்று பார்த்து தெரிந்துக் கொள்ளவும்.

நீங்கள் விரும்பித் தேர்வு செய்த முதல் கல்லூரியின் பாடப்பிரிவு நிரப்பபட்டிருந்தால், அதே கல்லூரியில் இரண்டாவது வரிசை பாடப்பிரிவை (BRANCH)யை தேர்வுசெய்யலாம். பாடப்பிரிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தால் முன்பு தேர்வுசெய்த இரண்டாவது வரிசை கல்லூரியை தேர்வு செய்யலாம்.

கலந்தாய்வு நடைபெறுகின்ற போது பல்கலைக் கழக இணையதளத்தை காலை மற்றும் பிற்பகலில் பொறியியல் கல்லூரி,வகுப்புவாரியான நிரப்பப்படவேண்டிய இடங்கள் போன்ற தகவல்கள் புதுப்பிக்கப்படுக்கின்றன. எனவே, கலந்தாய்வு காலை என்றால் முன்னால் இரவு இணையதளத்தில் பார்க்கலாம். பிற்பகல் என்றால் கலந்தாய்வு செல்லும் முன் அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அருகில் உள்ள கணினி மையத்திற்கு சென்று அண்ணா பல்கலைக் கழக இணையத்தளத்தில் நீங்கள் தேர்வுச் செய்த கல்லூரி மற்றும் பாடப்பிரிவு கிடைக்க வாய்ப்புள்ள இரண்டு அல்லது மூன்று கல்லூரிகளின் பெயரை எழுதிக் கொள்ளவும். இது உங்களின் தேவையற்ற மனக்குழப்பத்தை குறைத்து மனமகிழ்ச்சியை தரும்.

நீங்கள் கலந்தாய்வு கூடத்தில் முதலில் தேர்வு செய்த கல்லூரியை 10 முதல் 15 நிமிடத்தில் கலந்தாய்வு அதிகாரி அனுமதி பெற்று வேறு கல்லூரிக்கு மாற்றிக்கொள்ளலாம். ஆனால் ஒருகல்லூரியைத் தேர்வு செய்து ஒப்புக்கொண்டதற்கான சான்றிதழில் கையெழுத்து இட்ட பின், வேறு கல்லூரி அல்லது பாடப்பிரிவுக்கு மாற்ற வாய்ப்பில்லை.

உங்களின் ஒவ்வொரு முயற்சியும், தீர்க்கமான முடிவும் புதிய வாழ்க்கைக்கு அழைத்து செல்லும்.